பிரபல பாடகர் எஸ்.பி.பியின் சிகிச்சைக்கு அரசு உதவி செய்ய ரெடி – அமைச்சர் விஜயபாஸ்கர்!

Filed under: சென்னை |

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய உடல்நிலை மோசமாகி விட்டது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொலைபேசியில் எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி.பி சரண் மற்றும் தனியார் மருத்துவமனையான எம்.ஜி.எம்யின் எம்டி ஆகிய இருவரையும் தொடர்பு கொண்டு எஸ்.பி பாலசுப்பிரமணியான் உடல்நிலை பற்றி கேட்டறிந்தார்.

இதன் பின்பு எஸ்.பி.பியின் சிகிச்சைக்காக எந்த விதமான உதவியையும் அரசு செய்வதற்கு தயாராக உள்ளது எனவும் மற்றும் எஸ்.பி பாலசுப்ரமணியம் விரைவில் குணமாக வேண்டும் என வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எஸ்.பி பாலசுப்ரமணியம் மகன் சரண் அவருடைய தந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கி வருவதாகவும் அவருடைய உடல்நிலை பற்றி யாரும் வதந்தி செய்திகளை பரப்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.