இங்கிலாந்து நாட்டில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் மான்மவுத்ஷையர் பகுதியை சேர்ந்த மீன்பிடிக்கும் தொழிலை செய்து வரும் சகோதரர்கள் கடலின் கரை ஓரத்தில் இரண்டு அடி நீளம் கொண்ட வித்யாசமான ஒரு கொம்பை கண்டுபிடித்தனர்.
அந்த கொம்பை பார்த்த தொல்லியல் துறையினர் அதனை ஆய்வு நடந்த அனுப்பிவைத்தனர். ஆய்வு நடத்திய அந்த கொம்பு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் வாழ்ந்த விலங்கின் கொம்பு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நியோலித்திக் காலத்தில் உயிர் வாழ்ந்த ஆரோக்ஸ் இனத்தின் உடைய மாட்டின் கொம்பாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும், அதனை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.