பிரதமர் மோடிக்கு சமோசா, சட்னி தயாரித்த ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன்!

Filed under: உலகம் |

பிரதமர் மோடி அவர்கள் வரும் ஜூன் 4-ஆம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் உடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தற்போது ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் இந்தியாவின் சமோசா மற்றும் சட்னியை தயார் செய்து அதனை மோடிக்கு கொடுக்க விரும்புகிறேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த உணவுக்கு “SCOMOSAS” என பெயர் வைத்துள்ளார். சமோசாவையம் மற்றும் சட்னியையும் அவர் ட்விட்டரில் பதிவிட்டார். அத பதிவிற்கு 58 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

மேலும் அந்த ஆலோசனையில் முக்கியமான புதிய தொழில் மையங்கள் பற்றி விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.