முன்னாள் அமைச்சர் ஆ.ராசா தலைமையில், பெரம்பலூர் எம்.பி தொகுதிக்கு திமுக வேட்பாளர் அருண்நேரு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பெரம்பலூர் எம்.பி., தொகுதிக்கு திமுக சார்பில் அமைச்சர் நேருவின் மகன் அருண்நேரு போட்டியிடுகிறார். இன்று மதியம் 12 மணி அளவில் அதற்கான வேட்பு தாக்கல், திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆ.ராசா தலைமையிலும்,
மிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர், திருச்சி திமுக மத்திய மாவட்ட செயலாளர் க.வைரமணி, திருச்சி திமுக வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் ந.தியாகராஜன்,(எம்.எல்.ஏ.) பெரம்பலூர் திமுக மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் ஆகியோரது முன்னிலையிலும், வேட்பாளர் அருண்நேரு, பெரம்பலூர் எம்.பி தொகுதி தேர்தல் அலுவலர் கற்பகத்திடம் தாக்கல் செய்தார்.