தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை DMK files இரண்டாம் பாகம் வரும் ஜூலை மாதம் முதல் வாரம் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் DMK files முதல் பாகம் வெளியானதை தொடர்ந்து அண்ணாமலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதையடுத்து அண்ணாமலை மீது முதலமைச்சரின் குடும்பத்தினர் உள்பட திமுகவினர் வழக்கு தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பினர். இந்த சொத்து பட்டியல் வெளியான ஒரு சில நாட்களில் தான் ஜி ஸ்கொயர் மற்றும் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை செய்து வருகிறது. DMK files இரண்டாம் பாகம் ஜூலை முதல் வாரம் வெளியாகும் எனவும் அந்த பட்டியல் வெளியானவுடன் ஜூலை 9ம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் இருந்து நடைபயணம் தொடங்க இருப்பதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.