மனித உரிமைகளுக்கும், உலகப் வியாபாரத்திற்கு சீனா எதிராக இருக்கிறது என குற்றம்சாட்டி எட்டு நாடுகளின் எம்.பிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளனர்.
நியூ இன்டர் பார்லிமென்ட்ரி அல்லயன்ஸ் என்கின்ற அமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, ஸ்வீடன், நார்வே என்ற எட்டு நாடுகளும் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் எம்.பிகள் ஒன்றிணைந்து சீனாவுக்கு எதிராக செய்யப்பட போகிறார்கள் என தெரிவித்தனர்.
மேலும், ஹாங்காங் பிரச்சனையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையிட தேவையில்லை என சீனா கூறியுள்ளது.
சினாவின் உகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பெரும் பாதிப்பை எற்படுத்தி வருகிறது. இதனால், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி,பிரேசில், ஸ்பெயின் போன்ற நாடுகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.