2021 சட்டமன்ற தேர்தல் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. இதனை ஓ.பன்னிர் செல்வம் அறிவித்தார். 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அறிவிப்பு.
கடந்த சில வரமாக அ.தி.மு.க வின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்கிற போட்டி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே நடந்து வந்தது. இதை அடுத்து கட்சியின் செயற்குழு கூடத்தில் இருவரும் இடையே பெரும் விவாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க வின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை இன்று அறிவிக்கப்படும் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்து இருந்தார்.
இதனால் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னிர் செல்வம் ஆகிய இருவரின் வீட்டிற்கு சென்று மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை செய்தனர். பின்பு 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் மூலம் அ.தி.மு.க-வின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை இன்று வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.
இன்று காலை அ.தி.மு.க தலைமை அலுவலகம் உள்ள ராயபேட்டையில் இபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து செய்தியாளர் சந்திப்பின் போது அறிவிக்க உள்ளனர்.
11 பேர் கொண்ட குழுவில் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.வேலுமணி, ஜே.சி.டி. பிரபாகர், கோபால கிருஷ்ணன், மாணிக்கம், மனோஜ்பாண்டியன், சி.வி.சண்முகம், ப.மோகன், காமராஜ், ஆகியோர் இடப்பெற்றுள்ளனர்.