கொரோனா வைரஸை அழிப்பதற்கு மக்களின் முழு ஒத்துழைப்பு மிக அவசியம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

Filed under: தமிழகம் |

கொரோனா வைரஸை அழிப்பதற்கு மக்களின் முழு ஒத்துழைப்பு மிக அவசியமானது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூபாய் 127 கோடி மதிப்பில் கொரோனா வைரஸ் மருத்துவமனையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து ஆய்வு செய்தார். முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் போன்றோர் இருந்தனர்.

அந்த சமயத்தில் நிருபர்களிடம் பேசிய முதல்வர் கூறியது: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையான கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் 57.89 % பேர் குணம் அடைந்துள்ளனர். சென்னையில் கொண்டு வந்த ஊரடங்கால் கொரோனா பரவல் குறைந்துள்ளது.

கொரோனாவை அழிப்பதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானது. அவர்கள் கையில் தான் உள்ளது என தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சமூக பரவலாக மாறவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.