கிரிக்கெட் போட்டியை பார்க்க குறைந்தபட்சம் 25% ரசிகர்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகமாக உள்ளது. இதனால் மார்ச் மாதத்தில் இருந்து எந்த ஒரு கிரிக்கெட் போட்டி நடக்கவில்லை. இதனால் கிரிக்கெட் வீரர்கள் தங்களின் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
தற்போது கொரோனா வைரஸ் காரணத்தினால் பந்துவீச்சாளர்கள் பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்த கூடாது என ஐசிசி தடை விதித்துள்ளது. இதனைப் போலவே மக்களின் பாதுகாப்பைக் கருதி ரசிகர்கள் இல்லாமல் காலியான மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை நடத்துவது பற்றி திட்டமிட்டு வருகின்றனர்.
ஆனால், இதற்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார் இதனைப் பற்றி அவர் கூறியது: போட்டி நடக்கும்போது வீரர்கள் சிறப்பாக விளையாடுவதற்கு ரசிகர்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது. அப்படி ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடைபெற்றால் அதில் ஒரு சுவாரசியம் இருக்காது.
வீரர்கள் சிறப்பாக விளையாடுவது கடினமாகும். மைதானத்தில் ரசிகர்களின் சத்தம்தான் வீரர்களுக்கு ஊக்குவிக்க விதமாக இருக்கும். இதனால் குறைந்தஅளவில் 25 சதவீதமாவது ரசிகர்களுக்கு அனுமதி கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.