தன்னுடைய மகனுக்கு முடி வெட்டிவிடும் சச்சின் டெண்டுல்கர் – வைரலாகும் வீடியோ!

Filed under: விளையாட்டு |

சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய மகனான அர்ஜுன் டெண்டுல்கருக்கு முடியை வெட்டி விடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் விளையாட்டு வீரர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடல் மற்றும் வீட்டில் செய்துவரும் வேலைகள் பற்றிய புகைப்படம் மற்றும் விடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவரும் இந்தியன் முன்னாள் கேப்டன் கங்குலி வீட்டிலிருந்த பழைய புகைப்படத்தை வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு முடி வெட்டி விடும் புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.