ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தலைமை செயலராக நியமனம் – தமிழக அரசு!

Filed under: தமிழகம் |

ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் அந்தஸ்து அளிப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளார்.

ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அவர்களின் அந்தஸ்தை உயர்த்தி பல துறைகளில் கூடுதல் தலைமை செயலாளர்களாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளார்.

ஐஏஸ் அதிகாரிகளான விபு நாயர், பணீந்திர ரெட்டி, சாய்குமார், சிவசங்கரன், டிஎஸ் ஜவஹர் ஆகிய ஐந்து பேருக்கு பணி உயர்வு கிடைத்துள்ளது.

விபு நாயர் டான்சி தலைவராகவும், பணீந்திர ரெட்டி வருவாய் நிர்வாக ஆணையாளராகவும், சாய்குமார் முதல்வரின் செயலாளராகவும், சிவசங்கரன் நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி ஆணையாளராகவும், டிஎஸ்.ஜவஹர் போக்குவரத்து ஆணையாளராகவும் நியமித்துள்ளனார்.