தேனி கலெக்டருக்காக காத்திருந்த கெளமாரியம்மன் தேர். தாமதமாக தொடங்கிய தேரோட்டம்.
தேனி அருகே வீரபாண்டியில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது ஆண்டு தோறும் நடைபெறும் கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரை பெருந்திருவிழா கடந்த மாதம் 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட நிலையில் கடந்த 7 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை எட்டு நாட்கள் இந்த திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது
இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கௌமாரியம்மன் திருக்கோயில் திருத்தேரோட்டம் மே 10ஆம் தேதி மாலை நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்தனர்
முன்னதாக உற்சவர் கௌமாரியம்மன் வண்ண பட்டுடுத்தி சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் அமர்த்தி சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் பாரம்பரிய முறைப்படி தேவராட்டம் ஆடி தேரோட்டம் நிகழ்ச்சி தொடங்கியது
மேலும் மாலை 5 மணி அளவில் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என தெரிந்தும் தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் அலட்சியமாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தாமதமாக தேரோட்டம் நிகழ்ச்சிக்கு வருகை தந்ததாலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் 5 மணிக்கு நடைபெற இருந்த தேரோட்டம் 6:15 மணிக்கு அளவில் தேரை சிறித தூரம் வடம்பிடித்து இழுத்து திருத்தேரோட்டம் நடைபெற்றது
இதில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்த நிலையில் இந்த தேரோட்டம் நிகழ்ச்சியில் அதிகாரிகளுக்காக அருள்மிகு கௌமாரியம்மன் சுவாமி காத்திருந்தது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்
மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு மற்றும் மெத்தன போக்கால் தேரோட்டம் நிகழ்ச்சி ஒரு மணி நேரம் தாமதமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது