கூடுவாஞ்சேரி-பரனூர் இடையே எட்டு வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல்!

Filed under: தமிழகம் |

ரூபாய் 250 கோடி மதிப்பில் கூடுவாஞ்சேரி-பரனுர் இடையே எட்டு வழி சாலை அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான முதல் கட்ட வேலைகள் துவங்கி உள்ளது.

தமிழ்நாட்டின் 30 மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வரும் தெற்கு மூலை நுழைவாயிலாக இருக்கும் தாம்பரம், செங்கல்பட்டு இடையான சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு இந்த எட்டு வழிசாலையை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக பெருங்களத்தூர் முதல் கூடுவாஞ்சேரி வரையில் வேலைகள் முடிவடையும் எனவும் அடுத்து கூடுவாஞ்சேரி முதல் பரனூர் வரையில் 13 கிலோ மீட்டர் தூரத்துக்கு எட்டு வழி சாலை விரிவுபடுத்த உள்ளது. ரூபாய் 250 கோடி மதிப்பில் இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது.

இந்த எட்டு வழிச்சாலையின் வேலைகளை முடிப்பதற்கு ஓராண்டு ஆகும் என நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.