மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

Filed under: இந்தியா |

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடல்நலக்குறைவால் நேற்று இரவு டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அமைச்சர் அமித் ஷா கடந்த ஜூன் 2 ஆம் தேதி கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டு, பின்பு சிகிக்சை பெற்று ஆகஸ்ட் 14ஆம் தேதி குணமடைந்தார். ஆனால், அவரின் உடல் நிலையில் சோர்வு, வலி போன்றவை இருந்ததால் கடந்த 18ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்பு ஆகஸ்ட் மாதம் இறுதியில் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அமித் ஷா அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.

அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் மற்றும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.