மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் குணம் அடைய விரும்புகிறேன் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமித்ஷா சமீபத்தில் தான் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பினார். அதன் பின் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார். தற்போது உடல் சோர்வால் மீண்டும் எய்ம்ஸ் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் அமித்ஷா அவர்கள் விரைவில் குணம் அடைய விரும்புகிறேன் என முதல்வர் பழனிச்சாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில்; மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜி, நீங்கள் விரைவில் குணம் அடைந்து வர என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அவரின் அன்றாட வேலைகளை மீண்டும் துவங்கி நம் நாட்டு மக்களுக்கு சேவை செய்வர் என பதிவிட்டுள்ளார்.