ஸ்ரீரங்கத்தில் பஞ்சரத்தன கீர்த்தனைகள் கோஷ்டிகானம்.

Filed under: தமிழகம் |

ஸ்ரீரங்கத்தில் பஞ்சரத்தன கீர்த்தனைகள் கோஷ்டிகானம்.

பாரதியவித்யாபவன் மற்றும் இன்போசிஸ் பவுன்டேஷன் சார்பில் ஆண்டுதோறும் தியாகப்ரும்ம ஆராதனை பஞ்சரத்ன கீர்த்தனைகள் கோஷ்டி கானம் நிகழ்ச்சி திருச்சியில் நடத்தப்பட்டுவருகிறது.

இவ்வகையில் 11ம் ஆண்டுக்கான நிகழ்ச்சி நேற்று காலை 9.30 மணியளவில் ஸ்ரீரங்கம் ராகவேந்திரபுரம் ஸ்ரீசுமதீந்திரதீர்த்தர் மடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த முன்னணி மற்றும் மூத்த . இசைக்கலைஞர்களுடன் வளரும் கலைஞர்கள் சுமார் 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு வாய்ப்பாட்டு மற்றும் பக்கவாத்தியங்களோடு தியாகராஜரின் பஞ்சரத்னை கீர்த்தனைகளை கோஷ்டி கானமாக இசைத்தனர். திரளான இசையார்வளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாரதியவித்யாபவன் திருச்சிகிளை கவுரவச்செயலாளர் முரளி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜே.டி.சாரி உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.