விழுப்புரத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தடையை மீறி ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

Filed under: ஜோதிடம் |

விழுப்புரத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தடையை மீறி ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பிரதமர் மோடி அவர்கள் 2014 & 2019 தேர்தல் அறிக்கைகளில் விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி பஞ்சாப் எல்லையில் டெல்லியை நோக்கி அறவழியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் – பிரதமர் அவர்கள் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும் விழுப்புரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது – 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது.

இன்றைய போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் சு. முத்து விசுவநாதன், தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் பார்த்தசாரதி, தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கந்தவேல், கரும்பு விவசாயிகள் அணி மாநில செயலாளர் சக்திவேல், பட்டுக்கூடு விவசாயிகள் அணி மாநில செயலாளர் சுரேஷ், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சந்திரபிரபு, கடலூர் மாவட்ட நிர்வாகிகள் சதாசிவம், வீரமணி, தியாகராஜன், விசுவநாதன், செந்தில், வடிவேல், இராஜாராம், ஞானசேகர், தர்மபுரி கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரூர் ராஜமாணிக்கம், சக்திவேல், உளுந்தூர்பேட்டை மாரிமுத்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஏழுமலை, நாகேந்திரன், தாமரைக்கண்ணன், சிலம்பரசன், குமாரசாமி, ஸ்டுடியோ சரவணன், விழுப்புரம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் உலகநாதன், தனுஷ் பிரகாஷ், வேணுகோபால், முத்துவேல், ஐய்யனார், மகேந்திரன், நாராயணசாமி, சேதுநாதன், மயிலாடுதுறை Agro சிவக்குமார், இரகோத்தமன் உள்ளிட்டருடன் சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் வீரத்துடன் ரயில் மறியல் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.