இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்தோர் விகிதம் 70.76 சதவீதமாக உயர்வு – மத்திய அமைச்சகம்!

Filed under: இந்தியா |

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது இந்த வைரஸ் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் தினமும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், குணம் அடைந்தோர் வீதமும் உயர்ந்து வருகிறது.

இந்தியாவில் இதுவரை 23 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 47 ஆயிரத்துக்கும் மேல் பலியாகியுள்ளனர். இதில் 6,53,622 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தற்போது கொரோனா தொற்றில் இருந்து 16 லட்சத்து 95 ஆயிரத்து 982 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன் விகிதம் 70.76 சதவீதமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.95 சதவீதம் குறைவாக உள்ளது.