கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியில் உள்ள ஒரு இஸ்லாமிய நபர் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் இந்து முறைப்படி அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த திருமண காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில் ஆதி சிவனின் ஆசீர்வாதத்தோடு முப்பாட்டன் முருகனின் ஆசீர்வாதத்தோடு தமிழினத் தலைவன் பிரபாகரனின் ஆசீர்வாதத்தோடு இந்த கல்யாணம் நடக்கிறது என்று மணமகனாக சதாம் உசைன் அந்தப் பெண்ணை மணந்தார்.
இந்த கல்யாண காணொளியை பார்த்த தமிழகத்திலுள்ள சில ஜமாத்களிலிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இஸ்லாமியரான ஒருவன் எப்படி ஆதி பாட்டன் சிவன் என்றும் முப்பாட்டன் முருகன் என்றும் மேலும் பிரபாகரனை இஸ்லாமியர்கள் ஒரு தீவிரவாதியாக பார்க்கும்பொழுது அப்படிப்பட்ட பிரபாகரனின் பெயரை சொல்லி சதாம் உசேன் என்பவன் எப்பிடி திருமணம் செய்து கொள்ளலாம் இது முற்றிலும் இஸ்லாத்திற்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் முன்னாள் தவ்ஹீத் ஜமாத் தலைவர் பி ஜெயினுலாபுதீன் இதை வன்மையாக கண்டித்துள்ளார். அதாவது சீமான் இஸ்லாமியர்களை மூளைச்சலவை செய்து நாம் தமிழர் என்ற போர்வைக்குள் அவர்களை கொண்டுவந்து அவர்களை தாய்மதம் திரும்ப சொல்லி இஸ்லாமியர்களை மதமாற்றம் செய்யும் வேலையில் இறங்கியுள்ளார் என்று சீமான் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
ஒரு இந்துப் பெண் முஸ்லிமாக மாறி ஒரு முஸ்லிம் பையனை திருமணம் செய்யும்போது இந்துக்களிடமிருந்து இப்படிப்பட்ட எதிர்ப்பு வருவதில்லை ஆனால் ஒரு இஸ்லாமிய பையன் இந்து மதத்திற்கு மாறி இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டால் இஸ்லாமியர்களிடம் இருந்து மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்புவதை மக்கள் பார்க்கத் தொடங்கி விட்டார்கள் என்று சமூக வலைதளங்களில் இந்து ஆதரவாளர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
மேலும் எங்கள் கட்சியில் இணைந்தால் அவர் சாதி மதம் கடந்து தமிழனாய் ஒன்றிணைந்து விடுவார்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைவர்கள் சில பேர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால் நாம் தமிழர் கட்சியில் இருக்கும் இஸ்லாமியர்கள் இஸ்லாத்தை மதிக்காமல் தமிழ் என்ற இனப் போர்வைக்குள் மூழ்கிக் கிடக்கிறார்கள். இது இஸ்லாத்திற்கு முற்றிலும் எதிரானது இன்று நாம் தமிழர் கட்சியில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு இங்கு இருக்கும் ஜமாத்தார்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.