மகாராஷ்டிரா மாநிலத்தில் புதியதாக 150 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு!

Filed under: இந்தியா |

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 லட்சம் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மகாராஷ்டிரா டெல்லி தமிழ்நாடு குஜராத் ஆகிய மாநிலங்களில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 48 மணி நேரத்தில் புதியதாக 150 காவல்துறையினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனவல் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 4,666 ஆக அதிகரித்துள்ளது. பின்னர் 57 உயிரிழந்துள்ளனர்.