திண்டுக்கல் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் போக்சோவில் கைது.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் பாலுபாரதி. இவர் குஜிலியம்பாறை வட்ட லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஆவார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. இவருக்கும் D.கூடலூரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் தொடர்பு இருந்துள்ளது. கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் அந்த பெண் 2 குழந்தைகளுடன் பாலுபாரதியின் தோட்டத்தில் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அந்தப் பெண்ணின் 10 வயது மகளுக்கு பாலுபாரதி பாலியல் தொந்தரவு செய்ததாக வடமதுரை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related posts:
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு!
அதிமுகவேட்பாளர் கருப்பையா மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமாரிடம் இன்று 12.30 மணி அளவில் மனு தாக்க...
கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களில் சாமி தரிசனம் செய்யும் சிவாலய ஓட்டம் நிகழ்வு.
#BREAKING: போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ் கொரோனா தொற்றால் பாதிப்பு!