இந்தியாவில் உள்ள விவசாய பயிர்களை நாசப்படுத்த பாலைவன வெட்டுக்கிளிகள் வரும் என ஐநா அமைப்பு முன்பே தெரிவித்திருந்தது.
இந்த வெட்டுக்கிளிகளின் அட்டூழியத்தால் தற்போது கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெட்டுக்கிளிகளின் அட்டூழியம் இந்தியாவில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் தற்போது ஜெய்ப்பூர் முழுவதும் சுற்றித் திரிந்து கொண்டு பல இடங்களில் நாசப்படுத்தி வருகிறது. விவசாய பயிர்கள் மற்றும் பச்சை மரங்கள் போன்றவற்றையும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் தங்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.