கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வந்துள்ள வெட்டுக்கிளிகளின் கூட்டம் எந்த விவசாயப் பயிர்களையும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என வேளாண் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நேரலகிரி கிராமத்தில் நேற்று மாலை நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகளிகளின் கூட்டம் வந்துள்ளது.
இதனால் விவசாய பயிர்களை நாசம் செய்துவிடும் என பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து இன்று வேளாண் துறை இணை இயக்குனர் ராஜசேகர் உள்பட அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் நிருபர்களிடம் பேசிய அதிகாரிகள் வடமாநிலத்தை தாக்கிய பாலைவன வெட்டுக்கிளிகள் போல இந்த வெட்டுக்கிளிகள் இல்லை.
இதனால் விவசாய பயிர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்துள்ளனர். இந்த வகையான வெட்டுக்கிளிகளை விரட்டுவதற்கு தண்ணீரில் வேப்பெண்ணெய் தெளித்தால் கட்டுப்படுத்தலாம் என தெரித்துள்ளனர்.