மத்திய பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் இன்று காலமானார் – ட்விட்டரில் பிரதமர் மோடி இரங்கல்!

Filed under: இந்தியா |

மத்திய பிரதசம் மாநிலத்தின் ஆளுநர் லால்ஜி டாண்டன் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக் கோளாறால் சிகிச்சையில் இருந்த அவர் இன்று காலமானார்.

85 வயதான ஆளுநர் லால்ஜி டாண்டன் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக் கோளாறால் காரணத்தினால் உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோவில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் உத்தரபிரதேச மாநிலத்தின் ஆளுநர் ஆனந்திபென் பட்டியல் மத்திய பிரதசம் மாநிலத்தின் ஆளுநராக தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டனர்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஆளுநர் லால்ஜி டாண்டன் இன்று சிகிக்சை பலன் இன்றி காலமானார். பா.ஜ.க.வின் மூத்த தலைவராக இருந்தவர் லால்ஜி டாண்டன்.

இவருடைய மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ட்விட்டரில் அவருடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் கூறியது: ஸ்ரீ லால்ஜி டாண்டன் சமூகத்திற்கு சேவை செய்வதற்கு நினைவு இருப்பவர். உத்தரபிரதேசத்தில் பாஜகவை வலுப்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். அவர் ஒரு திறமையான நிர்வாகியாக ஒரு அடையாளத்தை உருவாக்கினார், எப்போதும் பொது நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவர் காலமானதால் கோபம்.

https://twitter.com/narendramodi/status/1285402668182040576

மேலும், இவருடைய மறைவுக்கு பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.