இளம் எழுத்தாளர் ஜோசன் ரஞ்சித் எழுதிய மெட்டமார்போசிஸ் ஆங்கில புத்தக வெளியீடு.

Filed under: இந்தியா |

இளம் எழுத்தாளர் ஜோசன் ரஞ்சித் எழுதிய மெட்டமார்போசிஸ் ஆங்கில புத்தக வெளியீடு.
மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பிக்கள் பங்கேற்பு.

இளம் எழுத்தாளர் ஜோசன் ரஞ்சித் எழுதிய மெட்டமார்போசிஸ் என்ற ஆங்கில புத்தகத்தை மத்திய அமைச்சர், எம்.பிக்கள் பங்கேற்று வெளியீட்டனர்.

திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளம் எழுத்தாளர் ஜோசன் ரஞ்சித். இவர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். அதன் தொடர்ச்சியாக மெட்டமார்போசிஸ் என்ற ஆங்கில புத்தகத்தை எழுதி வந்தார்.
இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா புதுடெல்லியில் நடைபெற்றது. விழாவில் மத்திய அமைச்சர் சதிஷ் சந்திர தூபே, இந்திய தொழில் அதிபர் அபிஷேக் வெர்மா, உத்திர பிரதேச மாநிலத்தின் அமைச்சர் தகூர் ரகுராஜ் சிங் , நடிகை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமா மாலினி, சுரேஸ் ரத்தன் சந்திரா ஆகியோர் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டனர்.
விழாவில் பல மாநிலங்களைச் சேர்ந்த நாடளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து எழுத்தாளர் ஜோசன் கூறுகையில் : ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தன்னுடைய நூல் படைப்பாக வெளி வருவது என்பது தாய் குழந்தையை பெற்றெடுப்பதற்கு இணையானது. அதே மனநிலை தான் எனக்கும் உள்ளது. அதுவும் கிராமத்தில் பிறந்த நான் இன்று நாட்டின் தலைநகரில் பல சாதனையாளர்கள் மத்தியில் எனது புத்தகம் வெளியிட்டுள்ளது எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. இந்த நேரத்தில் எனது தந்தை ஜான் பிரிட்டோ தாய் ஜோனி தனசீலி இருவருக்கும் நன்றி என்று கூறினார்.

இந்ந விழாவில், 2024 -ஆம் ஆண்டின் மிகவும் ஊக்கமளிக்கும் எழுத்தாளர்
என்ற விருதும் ஜோசன் ரஞ்சித்துக்கு வழங்கப்பட்டது.