நிலத்தகராறு காரணத்தினால் இமயம்குமார் என்பவரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் திருப்போரூர் தி.மு.க., எம்.எல்.ஏ., இதயவர்மனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்ட பகுதியில் திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கும் மற்றும் இமயம்குமார் என்பவருக்கும் நில தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை இருவருக்கும் இடையே வாக்குவாதமான நிலையில் ஏற்பட்டு பெரும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே எம்எல்ஏ அவருடைய தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இமய குமார் பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த துப்பாக்கியால் சூடு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரை கொண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திமுக எம்எல்ஏ இதயவர்மனை தேடி வந்துள்ளனர். தற்போது அவரை சென்னை மேடவாக்கம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.