நொய்டா, மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று நகரங்களில் அதிக திறனை கொண்ட பரிசோதனை மையங்களை இன்று காணொலி கட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
சரியான நேரத்தில் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் உலக நாடுகளை விட இந்தியாவில் கொரோனா விகிதம் குறைவு என மோடி தெரிவித்தார். கொரோனாவை எதிர்த்து நம் மக்கள் சிறப்பாக போராடி வருகின்றனர்.
இந்தியாவில் 11 ஆயிரம் பரிசோதனை மையங்கள் இருக்கிறது. பின்பு 1,300 ஆய்வகங்களில் தினதோறும் லட்சத்துக்கும் அதிகமாக பரிசோதனை நடத்தப்படுகிறது.
கொரோனா தடுப்பு கவச உடை தயாரிப்பதில் உலகில் இந்தியா 2வது இடத்தில் இருக்கிறது. இந்த மையங்கள் மூலம் HIV, டெங்கு, ஹெபடைடிஸ் பி மற்றும் சி, உள்பட பரிசோதனைகளும் செய்ய முடியும் என்றார் பிரதமர் மோடி.
மேலும், இதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மகாராஷ்டிரா, மேற்கு வங்களம், உத்தர பிரதேசம் மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.