மும்பையில் கொரோனாவுக்கு எதிரான போரை வென்ற 101 வயது முதியவர்!

Filed under: இந்தியா |

மும்பை மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 101 வயது முதியவர், முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்.

கொரோனா தொற்றால் பெரும்பாலும் வயது முதியவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டால் உயிரிழக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என உலக நாடுகள் தெரிவிக்கிறது. இருந்தாலும் 90 வயது மற்றும் 100 வயதுக்கு மேல் உள்ளவர்களும் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் இதற்கு முன்பு மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சாந்தா பாய் என்கிற 100 வயது மூதாட்டி கொரோனாவில் இருந்து குணமடைந்தார்.

இதை போல மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் இருக்கும் மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அர்ஜூன் கோவிந்த் என்கிற 101 வயது முதியவர் முழுமையாக குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளார்.

இன்று அந்த முதியவருக்கு பிறந்தநாள் என்பதால் மருத்துவமனை பணியாளர்கள் நேற்றே கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.