ஆஹா… சிபி சக்ரவர்த்தி! – ஒழிந்தது கள்ளச் சாராயம்!

Filed under: தமிழகம் |

Sibi Chakravarthy IPS SP Nagaiதமிழக அரசு பட்ஜெட்டிற்கு பெரிதும் உதவியாக இருப்பது ‘டாஸ்மாக்’ வருவாய்தான்! இதில், தமிழ்நாட்டிலேயே விற்பனையில் 83 சதவீதம் வருமானத்தை எட்டிப் பிடித்துள்ளது நாகப்பட்டினம் மாவட்டம் என்ற தகவல், சமீபத்தில் சென்னையில் நடந்த காவல்துறை, மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் வெளிவந்துள்ளது!
காரணம், நாகையில் எஸ்.பி.யாக உள்ள சிபி சக்ரவர்த்தி ஐ.பி.எஸ்.தான் என்பது, மாவட்ட மக்களின் கருத்து!
வேதாரண்யம் கோடியக்கரை முதல் கொள்ளிடம் வரை உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கள்ளச்சாராய விற்பனையை தடுத்த காரணத்தினால்தான், இன்று ‘டாஸ்மாக்’ கடைகளில் விற்பனை அதிகரித்து உள்ளது! ராமகிருஷ்ணன் எஸ்.பி.யாக இருந்தபோது, ஏ.எஸ்.பி.யாக சிபி சக்ரவர்த்தி ஐ.பி.எஸ். இருந்ததால், அனைத்துக் காவல் நிலையங்களிலும் உள்ள நிலைமைகள், சிபிக்கு அத்துப்படி!
நாகை மாவட்டத்தின் குற்றப் பதிவேடு துறையில் இருந்த அனைத்து வழக்குகளிலும் நிலுவையில் உள்ள குற்றவாளிகளைக் கண்டுபிடித்து வந்ததுடன், இரவு நேரங்களில் காவல்துறையின் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்துவதிலேயே கண்காணிப்பாக இருந்ததால், குற்றங்கள் குறைந்தது! சமீபத்தில் வேளாங்கன்னி திருவிழாவிற்கு கடற்கரையில் குளிக்கச் செல்லும் பக்தர்கள் பலியாகாமல் இருப்பதற்கு, கடுமையான கண்காணிப்பு; திருடர்களை கண்காணிக்க கேமராக்கள் போன்றவை இருந்தமையால், பல லட்சம் பக்தர்களின் பொருட்களை காப்பாற்ற முடிந்தது! மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர் மீது, அபராதம் விதித்ததில், விபத்துக்கள் நடக்காமல் இருப்பதற்கு, நெடுஞ்சாலை ரோந்துப் பணிகள் போன்றவைகளே, காரணம்! சிபி சக்ரவர்த்தி, ஐ.பி.எஸ். இளைஞராக இருப்பதால், எந்தக் காரியத்தையும் சிறப்பாக & செயற்கரியச் செயல்களை செய்து முடித்து, அரசுக்கு நல்லதொரு பெயரை ஏற்படுத்தி வருகிறார்! சபாஷ், சிபி!