நடிகர் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விரைவில் வெளியாக உள்ளது. இந்த பிக் பாஸ் நான்காவது சீசனின் நிகழ்ச்சி அக்டோபர் 10ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என தகவல் கூறப்படுகிறது.
இந்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை விஜய் டிவி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகர் கமலஹாசன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பிக் பாஸ் நான்காவது சீசன் நிகழ்ச்சி பற்றி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ 1.53 நிமிடங்கள் கொண்டுள்ளது.
இந்த வீடியோ சிங்காரவேலன் படத்தில் இடம்பெற்றுள்ள “சொன்னபடி கேளு” பாடல் இடம் பிடித்துள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் கொரோனா வைரஸுக்கான விழிப்புணர்வை தெரிவிக்கும் வகையில் சிறப்பாக உள்ளது.
சொன்னபடி கேளு சொல்லுறது பாஸ்; உங்கள் நான் எனவும் கமல்ஹசன் அந்த வீடியோ உடன் ட்விட்டை பதிவிட்டுள்ளார்.