தேசிய அறிவியல் தினத்தையொட்டி தனியார் பாலிடெக்னிக் மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Filed under: தமிழகம் |

விராலிமலையில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி தனியார் பாலிடெக்னிக் மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே மதர்தெரசா பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி சார்பில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி விராலிமலையில் நடைபெற்றது.

பேரணியை தனியார் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியானது விராலிமலை காமராஜர் நகரிலிருந்து தொடங்கி புதிய பேருந்து நிலையம், கடைவீதி சட்டமன்ற அலுவலகம் வழியாகச் சென்று சோதனைச்சாவடியில் நிறைவுபெற்றது. இப்பேரணியில் மாணவர்கள் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் வளமுடன் வாழ்வோம் , பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்துவோம் என்று கோஷங்கள் எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திச் சென்றனர், மேலும் அறிவியல் தினத்தையொட்டி அறிவியல் வளர்ச்சிக்கு பாடுபட்ட அறிஞர்களை நினைவுபடுத்தும் வகையில் அவர்களின் புகப்படங்களை முகத்தில் மாட்டிக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இப்பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதில் முன்னாள் ஆவின் சேர்மன் பழனியாண்டி, வடக்கு மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, விவேகா பள்ளி தாளாளர் வெல்கம் மோகன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் முருகேசன், கூட்டுறவு சங்க தலைவர் அய்யப்பன், ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், விராலிமலை துணைத்தலைவர் தீபன் சக்கரவர்த்தி, இமயவரம்பன், செல்வகுமார், கோபி ராகவன், ராமலிங்கம் உள்பட ஏராளன பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.