ஜம்மு-காஷ்மீரில் கட்டப்பட்ட ஆறு புதிய பாலங்களை காணொளி மூலம் திறந்து வைத்தார் – ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்!

Filed under: இந்தியா |

ஜம்மு காஷ்மீர் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வேலைகளை எல்லை சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) நடத்தி வருகிறது. ஜம்முவில் ரூபாய் 43 கோடி மதிப்பில் ஆறு புதிய பாலங்களை பிஆர்ஓ கட்டியுள்ளது. இந்தப் புதிய பாலங்களை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைத்தார்.

ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்தபடியே காணொலி மூலம் கட்டப்பட்ட ஆறு புதிய பாலங்களை திறந்து வைத்தார். இவருடன் உயர் அதிகாரிகள் இருந்தனர்.

பின்பு பாலங்கள் உள்ள பகுதியில் நடந்த விழாவில் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டு கொடியசைத்து வாகனப் போக்குவரத்தை ஆரம்பித்து வைத்தனர்.

https://twitter.com/rajnathsingh/status/1281095245841657856