ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நிலநடுக்கம்!

Filed under: இந்தியா |

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை 5.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஜம்மு காஷ்மீர் நிலநடுக்கம் வந்துள்ளது.

இதனை பற்றி அதிகாரிகளின் கணக்கு படி இந்த நில அதிர்வு தஜிகிஸ்தானில் சுமார் 100 கி.மீ பூமிக்கு அடியில் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீநகர், கிஷ்த்வார் மற்றும் தோடா மாவட்டங்கள் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் இடங்களில் இருக்கும் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர்.

நேற்று இரவு ஜம்மு-காஷ்மீரில் 3.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு வந்துள்ளது.