நீலகிரி மாவட்டத்தில் வரும் 9ஆம் தேதி பூங்காக்கள் திறப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Filed under: தமிழகம் |

நீலகிரி மாவட்டத்தில் வரும் 9ஆம் தேதி பூங்காக்கள் திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெறுவது கட்டாயம் எனவும், உள்மாவட்டத்தில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகள் ஆதார் அட்டை அல்லது வேற ஏதாவது அடையாள அட்டையை காண்பித்து செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதில் முதல் கட்டமாக தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, ரோஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகிய சுற்றுலா தலங்கள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.