Paytm பேமெண்ட் சேவைகளை நிறுத்திய ரிசர்வ் வங்கி!

Filed under: இந்தியா,உலகம்,தமிழகம் |

Paytm பேமெண்ட் வங்கி சேவைகளை இந்திய ரிசர்வ் வங்கி இன்று முதல் நிறுத்தியதாக அறிவித்துள்ளது.

இனி Paytm செயலில் எந்தவொரு வாடிக்கையாளர் கணக்கு, ப்ரீபெய்டு கருவிகள், வாலட்கள் மற்றும் பாஸ்ட் டேக் போன்றவற்றில் டெபாசிட் அல்லது டாப்-அப்களை ஏற்க RBI தடை விதித்துள்ளது. இந்தத நடவடிக்கை Paytm நிறுவனத்திற்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. இந்தியாவில் மிகப்பெரிய பணம் செலுத்தும் நிறுவனங்களில் ஒன்றாக இருந்த Paytm
நிறுவனம் 500 மில்லியன்க்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ள இந்திய ரிசர்வ் வங்கி பிப்ரவரி 29ம் தேதி முதல் Paytm பேமெண்ட்ஸ் வங்கி சேவைக்கு தடை விதித்துள்ளது. மேலும் Paytmஇல் பணத்தை புதிதாக டெபாசிட் செய்யவும் பண பரிமாற்றம் செய்ய உதவும் பேமெண்ட் பேங்க் செயல்பாடு நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. அதேபோல் பிரிபெய்டு சேவை உள்ளிட்ட வசதிகளை வழங்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே வேலட்டில் உள்ள தொகையை பயன்படுத்த மற்றும் யுபிஐ சேவையை பயன்படுத்த தடை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.