ஊராட்சி தலைவியின் பதவியை ரத்து செய்ய கோறி மனு.

Filed under: தமிழகம் |

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தர்மபுரம் ஊராட்சியில் ரெங்கநாயகி என்பவர் ஊராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்து வருகிறார்.

கடந்த 2020 முதல் 2024 வரை அவரின் பதவி காலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இந்த ஊராட்சியில் 3.75 கோடி ரூபாய் ஊராட்சிக்கு நிதி இழப்பு ஊராட்சி மன்ற தலைவி மூலம் ஏற்ப்பட்டுள்ளது. ஊராட்சி சட்ட விதி 205 படி இந்த ஊராட்சி தலைவியின் பதவியை ரத்து செய்ய வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.