இந்திய அணியுடன் விளையாடுவது சிறப்பானது – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்!

Filed under: விளையாட்டு |

இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது ஸ்பெஷலானது. இதற்கு பல நாட்கள் காத்திருக்க இயலாது என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் இந்திய அணி ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று டி20, நான்கு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

இதனை பற்றி ஸ்டீவ் ஸ்மித் கூறியது: இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது ஸ்பெஷலாக இருக்கும். இந்திய அணி சிறந்த பார்மில் உள்ளது. இதனால் இந்தப் போட்டியில் விளையாட ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன் என்றார்.

மேலும், அண்மையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இடம் பேசி அங்கு இருக்கும் சூழ்நிலை பற்றி கேட்டறிந்தேன். கோலி ஒரு சிறந்த வீரர் இந்திய அணிக்காக தீவிரமாக போராடுகிறார். கடந்த ஆண்டு உலக கோப்பை லீக் ஆட்டத்தில் கிண்டல் செய்த இந்திய ரசிகர்களுக்காக என்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இந்த சம்பவம் அவர் மீது எனக்கு பெரிய மதிப்பை அளித்தது. அணியை சிறப்பாக வழி நடத்துகிறார்.

இவ்வாறு ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.