இன்று பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாளுக்கு இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவருடைய பிறந்தநாளுக்கு இந்தியாவில முழுவதும் ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், மாணவர்களுக்கு தேவையான பொருட்கள், ரத்ததானம் போன்றவை பாஜக தொண்டர்களால் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடிக்காக ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், இந்தியா நடிகர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதை அடுத்து வெளிநாட்டு தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், நேபாளப் பிரதமர் சர்மா ஒளி, ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், இங்கிலாந்து போரிஸ் ஜான்சன் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.