மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்த அறிவிப்புகளில் கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் புதிய மாற்றம் ஏற்படும் என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
பிரதமர் மோடி அவர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியது: இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் நமது சுகாதார மற்றும் கல்வித் துறைகளில் மாற்றத்தக்க அடிப்படையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதன் மூலம் தொழில்முனைவோரை உயர்த்தும், பொதுத்துறை பிரிவுகளுக்கு உதவி செய்யும். கிராம பொருளாதாரத்தை புதுப்பிக்கும். மற்றும் மாநிலங்களின் சீர்திருத்தப் பாதைகளுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும்..
இவ்வாறு பிரதமர் பதிவிட்டார்.