பாளையங்கோட்டையில் கூலித்தொழிலாளியை அரிவாளாள் வெட்டிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை இலந்தை குளம் பகுதியைச் சோ்ந்த தளவாய் மகன் அங்கப்பன் (49). கூலித்தொழிலாளி. இவர் ஞாயிற்றுக்கிழமை பாளையங்கோட்டை ரயில் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் வெட்டியதாம். பலத்த காயமடைந்த அங்கப்பனை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து பெருமாள்புரம் போலீஸார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளையும் தேடி வருகின்றனர்.