வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு மருத்துவமனையில் அனுமதி!

Filed under: தமிழகம் |

தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை விழுப்புரத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின்பு அவரை சென்னைக்கு மாற்றினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமான தகவலை அறிந்த அவர், நலம் விசாரிப்பதற்கு அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு இன்று காலை சென்னையில் இருந்து சேலத்துக்கு காரில் சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு உடல்நலம் குறைந்ததால், அவரை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி கொடுக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் அமைச்சரை நேரில் சென்று பார்வையிட்டனர். இதன் பின் அவரை சென்னைக்கு அனுப்பிவைத்தனர்.