அமர்நாத் கோவிலுக்கு சென்று பனிலிங்கத்தை தரிசித்தார் – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

Filed under: இந்தியா |

காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலுக்கு சென்று பனிலிங்கத்தை தரிசனம் செய்தார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். சுமார் ஒரு மணி நேரம் கோவிலில் வழிபட்டு இருந்து உள்ளார்.

அமர்நாத் கோயிலின் பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்கு இந்து மக்கள் ஆர்வமாக செல்கின்றனர். வருடா வருடம் லட்சக்கணக்கான மக்கள் மிகச் சிரமப்பட்டு மலை ஏறி பனி லிங்கத்தை தரிசித்து செல்கின்றனர்.

https://twitter.com/rajnathsingh/status/1284366231974240256

தற்போது நேற்று லடாக் சென்ற ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஜம்மு காஷ்மீர் செல்கிறார். இதனிடையே அமர்நாத் கோவிலுக்கு சென்று பனிலிங்கத்தை தரிசனம் செய்தார்.