சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் எண்ணிக்கை தினதோறும் அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 71 லட்சத்து 20 ஆயிரத்து 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,09,150 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 61 லட்சத்து 49, 535 பேர் குணமடைந்து உள்ளனர். பின்பு 8 லட்சத்து 61 ஆயிரத்து 853 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது குணமடைந்தோர் விகிதம் 86.4 சதவீதமாக அதிகரித்துள்ளது மற்றும் இறப்பு விகிதம் 1.5 சதவீதம் குறைவாக உள்ளது. பின்பு சிகிச்சை பெறுவோரின் விகிதம் 12.1 சதவீதம் குறைவாக உள்ளது.
பின்னர், கடந்த 24 மணி நேரத்தில் 9,98,581 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8,78,72,093 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.