தனிவாரியம் அமைக்க வேண்டும் – நவசமாஜ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவற்றம்.
நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட நவசமாஜ் அமைப்பின் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநிலத் தலைவர் பேராசிரியர் முனைவர் டாக்டர் அன்பானந்தம் தலைமை வகித்தார். செயலாளர் பவன்வார், அமைப்புச் செயலாளர் பாலசந்தர், பொருளாளர் சேகர் பாபு, இணை செயலாளர் அரிமா மதிவாணனன் மற்றும் ஐ.டி. பிரிவு அருண்குமார் ஆகியாேர் முன்னிலை வகித்தனர்.
முதலில், நவசமாஜ் பெண்கள் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் சார்பில் குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட உறுப்பினர்கள் அறிமுகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத் தலைவராக சிவராஜ், செயலாளராக மரம் சிங்கராவேலு, பொருளாளராக தனபால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அத்துடன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல, கரூர் மாவட்டத் தலைவராக விஜயன், செயலாளராக திருமூலர், பொருளாளர் தங்கவேல் ஆகியோர் தேர்வு செய்யப்படனர். மேலும், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பதிலுக்கு, புதிய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. அப்போது, புதிய நிர்வாகிகள் அனைவரும், நவசமாஜ் உறுதிமொழியை வாசித்து ஏற்றுக் கொண்டனர். விழாவில், கலை, கல்வி, விளையாட்டு உள்ளிட்டவைகளில் சாதனைபடைத்த 5 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு விருது வழங்கப்பட்டன. விழாவில், ஈரோடு மாவட்டத் தலைவர் அன்பழகன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் மஞ்சுநாத், தி.மலை மாவட்டத் தலைவர் ஆறுமுகம், செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் பழனிவேல், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் கருப்புசாமி, தர்மபுரி மாவட்ட இணை செயலாளர் சரவணன், புதுச்சேரி மாநில பொருளாளர் புருஷோத்தமன், மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன், புகழேந்தி மற்றும் சண்முகம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மருத்துவர் சமூகத்திற்கு கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் 5 சதவீதம் உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளவர்களுக்கு உடனடியாக கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும், மருத்துவர் சமூகத்திற்கு என உடனடியாக தனிவாரியம் அமைக்க வேண்டும், பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்படும் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளை மருத்துவர் சமூகத்திற்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மார் 1-ம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்லாண்டு, பல்லாண்டு வாழ வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.