பாகிஸ்தானுக்கு வழங்கவிருந்த 300 கோடி டாலர் கடன் உவியை சவுதி அரேபியா நிறுத்தியது – உயரும் எதிர்ப்புகள்!

Filed under: உலகம் |

பாகிஸ்தானுக்கு கடன் உதவி மற்றும் கச்சா எண்ணெய்யை கொடுத்து வந்த சவுதி அரேபியா, இனிமேல் கொடுக்கப்படாது என தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு நீக்கியது. இதனால் எதிராக சவுதி அரேபியாவின் ஆதரவை பெற்று வந்த பாகிஸ்தான் தோல்வியை தழுவியது.

இதனை தொடர்ந்து சவுதி அரேபியாவிற்கு எச்சரிக்கை தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சர் ஷா முகுமது குரேஷி கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்காக பாகிஸ்தானுக்கு கொடுக்கவிருந்த 300 கோடி டாலர் கடன் உதவி மற்றும் 320 கோடி டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய் விநியோகம் நிறுத்த போவதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இதனால் இதற்கு முன்பே கொடுத்த 100 கோடியை திருப்பி கொடுக்க வேண்டிய நிலை பாகிஸ்தானுக்கு வந்துள்ளது.