மாமல்லபுரம் கடற்பகுதியில் மாயமான ஆந்திர மாணவர்கள் 4 பேரின் உடல்களை இரண்டாம் நாளாக தீயணைப்புப் படையினர் இன்று தேடி வருகின்றனர்
ஆந்திராவின் சித்தூரைச் சேர்ந்த 46 பேர் சுற்றுலா வந்த நிலையில், கடற்கரை கோயில் அருகே நேற்று கடலில் குளிக்கும் போது 10 பேர் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்
அப்பகுதி மீனவர்கள் 6 பேரை மீட்ட நிலையில், 4 பேர் கடலில் மாயமாகினர். போலீசார், மீனவர்கள் ஸ்கூபா டைவிங் பிரிவினர் என 20 பேர் கொண்ட குழுவினர் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்