தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் ஏழு பேருக்கு கொரோனா பாதிப்பு!

Filed under: விளையாட்டு |

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

தென்னாபிரிக்கா அணி மார்ச் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதில் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணத்தினால் அந்த போட்டிகள் கைவிடப்பட்டது. இதன் பின்னர் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வீரர்கள் நாடு திரும்பினர்.

தற்போது தென்னாபிரிக்கா கிரிக்கெட் போர்ட் (சிஎஸ்ஏ) சார்பில் ஒப்பந்த வீரர்கள், பணியாளர்கள் உள்பட 100 பேருக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சி.எஸ்.ஏ., தலைமை அதிகாரி ஜாக்குஸ் பால் கூறியது: கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. எங்கள் மருத்துவ முறையின்படி கொரோனாவால் பாதித்தவர்களை பற்றி வெளியில் சொல்ல இயலாது, என்றார்.