முன்னாள் சி.ஸ்.கே வீரர் மைக்கேல் ஹசியின் ஐ.பி.எல் லெவன் அணி – இவரா கேப்டன்!

Filed under: விளையாட்டு |

முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பேட்ஸ்மேன் மைக்கேல் ஹசி தற்போது ஐ.பி.எல் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். அந்த அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியை தேர்ந்து எடுத்துள்ளார்.

இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹசி ஒரு ஐபில் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.

அந்த அணி இதோ:

ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் கேப்டனாக எம்எஸ் டோனி, ஹர்திக் பாண்டியா, ஆன்ட்ரி ரசல், ரஷித் கான், யுவேந்திர சகால், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை தேர்வு செய்துள்ளார். பின்னர் 12வது வீரராக கே எல் ராகுலை தேர்ந்து எடுத்துள்ளார்.