உப்பளம் தொகுதியில் *கொசு மருந்து* தெளிக்கும் பணி

Filed under: புதுச்சேரி |

உப்பளம் தொகுதியில் *கொசு மருந்து* தெளிக்கும் பணி திமுக கழக துணை * உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தொடங்கி வைத்தார்:

*புதுச்சேரி மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் உப்பளம் தொகுதி முழுவதும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்* *அனிபால் கென்னடி* அவர்கள் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகிறார்,

பொதுமக்களை டெங்கு காய்ச்சலில் இருந்து காக்க வேண்டும் என்று *நகராட்சி டாக்டர்* *பிரிதா* அவர்களை *சட்ட மன்ற* *உறுப்பினர்* *அனிபால் கென்னடி* நேரில் சென்று சந்தித்து கொசு மருந்து அடிக்க அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, உப்பளம் தொகுதியில் தனது கழக நிர்வாகிகள் சகோதரர்கள் உடன் மக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் தொகுதி முழுவதும் கொசு மருந்து தெளிக்கும் பணியினை *சட்டமன்ற உறுப்பினர்* *அனிபால் கென்னடி* தொடங்கி வைத்தார். இன்று தொகுதி முழுவதும் கொசு மருந்து தெளிக்கும் பணி தொடங்கப்பட்டது.

வாணரப்பேட்டை, கல்லறை சாலை, அலேன் வீதி, தாவீது பேட்டை, எல்லை அம்மன் கோயில் தோப்பு, காளி அம்மன் கோயில் தோப்பு, ஜெயராம் செட்டியார் தோட்டம், கோவிந் செட்டியார் தோட்டம் பகுதியில் இன்று கொசுக்களை அழிக்கும் மருந்து புகை அடிக்கப் பட்டது , உடன் நகராட்சி ஆய்வாளர் ரவி, மேஸ்திரி கிளோவிஸ், கழக நிர்வாகிகள் சக்திவேல், ஹரிகிருஷ்ணன், ராஜி, விநாயகமூர்த்தி, ஈசாக்கு, ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.