சொத்து உரிமையில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு – இ.பி.எஸ்; ஓ.பி.எஸ் வரவேற்பு!

Filed under: தமிழகம் |

இன்று உச்சநீதிமன்றத்தில் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு உண்டு என சட்டம் கொண்டு வரப்பட்டது.

சொத்து உரிமையில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னிர் செல்வமும் வரவேற்று உள்ளனர்.

இந்த தீர்ப்பை பற்றி இருவரும் அவர்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டது: சொத்து உரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.

சமூக நீதியை காப்பாற்றும் விதமாக வந்திருக்கும் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என பதிவிட்டுள்ளார்.

இதன் பின்பு துணை முதலமைச்சர் ஓ. பன்னிர் செல்வம் பதிவிட்டது: சமூகநீதியை நிலைநாட்டும் வகையில், உச்ச நீதிமன்றம் “பூர்வீக சொத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை உண்டு” என்று வழங்கியுள்ள தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன்.

இத்தீர்ப்பால், சமூகநீதி நிலைநாட்டப்பட்டதுடன், பெண்கள் முன்னேற்றத்திற்கு இது மேலும் வலுசேர்ப்பதாக அமையும் என பதிவிட்டுள்ளார்.